2025 மே 26, திங்கட்கிழமை

டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டல் பேரணி

Suganthini Ratnam   / 2017 மே 08 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகமும் இணைந்து நடாத்திய டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டல்  பேரணி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபை முன்னால் இருந்து ஆரம்பமான பேரணி  வாழைச்சேனை பிரதேச சபையை சென்றடைந்தது.

 
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களாக கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, சிப்லி பாறூக், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி அச்சுதன் பாமினி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வாகரை, வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர்கள், வேலட் விஷன் உத்தியோகத்தர்கள்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
இப்பேரணியில் வாகரை, வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்கள் முன்னூறுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் பேரணியின் இறுதியில் வாழைச்சேனை வை.எம்.சி.ஏ நிறுவனத்தினால் டெங்கு ஒழிப்பு வீதி நாடகம் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X