2025 மே 08, வியாழக்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், ஆரம்பிக்கப்பட்டுள்ள உயிரியல் ரீதியிலான டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், சுமார் 10,000 'கப்பி' இன மீன் குஞ்சுகள், கிணறுகளுக்குள் இடப்பட்டுள்ளனவென, சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

இது மழை காலம் என்பதால், டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களைத் தெரிவு செய்து, அவற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னெச்சரிக்கையாக, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் பாவனையிலுள்ள சுமார் 8,000 கிணறுகளுக்குள் 'கப்பி' இன மீன் குஞ்சுகள் இடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தரிசு நிலங்களும் ஆகக் கூடுதலாக டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதற்குத் தோதாக பாழடைந்த கிணறுகளும் தான் காணப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X