2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு நோயாளர்கள் 83 ​பேர் இனங்காணப்பட்டனர்

Editorial   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, பொது சுகாதாரப் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை, டெங்கு நோயாளர்கள் 83 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்.எஸ்.நஜீப்ஹான் தெரிவித்தார்.

தேசிய டெங்கொழிப்பு வாரத்தை முன்னிட்டு, நேற்று (04) இடம்பெற்ற டெங்கு சோதனை நடவடிக்கையின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

“வாழைச்சேனை, கோறளைப்பற்று  பிரிவிலுள்ள செம்மண்ணோடை, பிறைந்துறைச்சேனை  ஆகிய இரு பிரதேசங்களுமே அதிக டெங்கு  நோயாளர்கள் காணப்படும் பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளன” எனவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X