Janu / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை பெய்ய ஆரம்பித்து இருப்பதால் டெங்கு நோய் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி லதாகரனின் வழிகாட்டலில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை கோட்டைமுனை பிரதேசத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந் நடவடிக்கையின் போது ஆறு பிரிவுகளாக சுகாதார பகுதியினர் பிரிக்கப்பட்டு 168 வீடுகளில் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
டெங்கு பரவும் இடங்களாக வைத்திருந்த இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு மட்டக்களப்பு மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களினால் அவைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன.
குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரீ.எல்.ஜவ்பர்கான்




26 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
1 hours ago