2025 மே 10, சனிக்கிழமை

டெங்கு விழிப்புணர்வு வெற்றி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த டெங்குத் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு வெற்றியடைந்துள்ளதாக, ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் இருந்து வந்த டெங்கு அச்சுறுத்தல் வெகுவாகக் குறைந்துள்ளது.

“இவ்வாண்டின் இதுரையான காலப்பகுதிலும் உள்ளூரில் டெங்குத் தாக்கத்திற்குள்ளாகி மரணித்த சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன், டெங்குத் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படுவோர் எவரும் இல்லை என்ற நிலைக்கு வந்திருப்பது  நம்பிக்கையைத் தருகிறது.

“டெங்கு ஒழிப்புக்கான சுகாதாரப் பிரிவினரின் வேலைத்திட்டமும் டெங்கு பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வும் அதனால் கிடைத்த ஒத்துழைப்புமே இத்தகைய சாதகமான அடைவுக்குக் காரணமாகும்.

“அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாகமும் திண்மக் கழிவகற்றல், நகரின் தூய்மையைப் பேணுதலில் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன.

இதே விழிப்புணர்வும் திட்டமிட்ட தொடர் செயற்றிறனான பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமாயின் வரப்போகின்ற பருவ மழைக் காலத்திலும் டெங்கு அச்சுறத்தலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X