Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 03 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எம்.அஹமட் அனாம்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் டெங்குக் கட்டுப்பாட்டு ஊழியர்கள் இருவர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்குத் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பிரிவில், ஒக்டோபர் மாதம் மாத்திரம் டெங்குக் காய்ச்சலால் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இம்மாத ஆரம்பத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்த ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக், ஒருவர் மரணமடைந்துள்ளார் என்றார்.
டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டோர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியன பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் ஆகியோர் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பட்டதாரி பயிலுநர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago