Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில், டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர், இன்று (26) உயிரிழந்துள்ளார் என, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாசல் வீதி, மூன்றாம் குறுக்கில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயார் 43 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, டெங்கு நுளம்புகள் பரவும் வகையில், நீர்த் தாங்கி, வடிகாண் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகின்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 211 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago