Princiya Dixci / 2016 நவம்பர் 26 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன்
மாணவர்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு, ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய நல்லிணக்க சகோதர பாடசாலைகளின் சங்கமம், இன்று சனிக்கிழமை (26) சத்துருக்கொண்டான் சர்வோதயத்தில் ஆரம்பமானது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டலின் கீழ் நடைபெறும் 5 நாட்கள் கொண்ட வதிவிட சங்கமத்தில் கல்லியைப் பாவித்து இயற்கையை ரசிப்பது, சவால்களுக்கு எப்படி முகங்கொடுப்பது, சாதகமானதை வைத்துக்கொண்டு பாதகமானதை மறந்து விடும் மனப்பான்மையை மறப்பது உள்ளிட்ட விடயங்கள் இச்சங்கமத்தில் உள்வாங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுக்கு தென்மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து 100 சிங்கள மாணவர்களும் 20 ஆசிரியர்களும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து 100 தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களும் 20 ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. மனோகரன், தென்மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.க. ராஜபக்ஸ, தென்மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் கே. தர்மசிறி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025