Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் தேசிய ரீதியில் நடைமுறை படுத்தி வருகின்ற தேசிய மொழி பயிற்சி வேலைத்திட்டம் தற்போது அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது .
இதற்கு அமைவாக தமிழ் மொழி மாணவர்களுக்கு சிங்கள மொழியும் சிங்கள மொழி மாணவர்களுக்கு தமிழ் மொழியும் கற்பிக்கும் முறைமையினை தேசிய மொழி பயிற்சி திட்டம் நாடளாவியல் ரீதியாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது .
இத்திட்டத்தின் கீழ் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர்தர கல்வியை நிறைவு செய்த மாணவர்களில் தெரிவு செய்யப்பட 60 மாணவர்களுக்கு சிங்கள மொழி தொடர்பான 12 நாட்கள் பயிற்சி நெறி மட்டக்களப்பு இந்து கல்லூரியில் நடைபெற்றுவந்தது .
இப் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பணிப்பாளர் க.கோபிநாத் தலைமையில் இடம்பெற்றது.

50 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago