Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கல்வியமைச்சு தேசிய மட்டத்தில் நடாத்தும் தேசிய மட்டத்திலான தமிழ் மொழித் தினப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை (19) மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தின் சுவாமி விபுhலனந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆம்ப நிகழ்வில் தமிழ் பாரம்பரிய முறைப்படி அதிதிகள் ஊர்வலமாக பிரதான மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் 9 மாகாணங்களில் இருந்தும் 800 போட்டியாளர்களும், 500 மத்தியஸ்தர்களும், கலந்து கொண்டனர். இப்போட்டி 24 பிரிவுகளாக நடைபெற்றன.
இம்முறை மட்டக்களப்பு கல்வி வலயம் கல்வியமைச்சுடன் இணைந்து அகில இலங்கை தமிழ் தினப் போட்டியினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
கல்வியமைச்சின் மானுடவியல் மரபுரிமைகள் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.ரத்நாயக்கா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், கல்வியமைச்சின் தமிழ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் எஸ்.முரளிதரன், கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர்; என்.மனோகரன், மட்டக்களப்பு வலயக் கல்விப்பாளர் கே.பாஸ்கரன், இராம கிருஸ்னமிஷன் தலைவர் சுவாமி சதுர்;புஜானந்த ஜீ, சப்பரகமுவ மாகாண பௌத்த சிங்கள பிரிவுக்குப் பொறுப்பான கல்விப்பணிப்பாளர் பஞ்சலங்க தேரோ உட்பட மாகாண கல்வி அதிகாரிகள், கல்விப்பணிப்பாளர்கள், அதிபார்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago