2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தொடர் தொலைக் கல்விப் பரீட்சைகள்: ஏப்ரல் 8 இல் ஆரம்பம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்தும் முதலாம் வருட 100 சதவீத மட்ட வெளிவாரி கலைப் பட்டதாரி மாணவர்களுக்கான தொடர் தொலைக் கல்வி பரீட்சைகள், (Distance and Continuing Education) எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அப்பல்கலைக்கழகம் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளது. 

இப்பரீட்சைகள், ஏப்ரல் 30ஆம் திகதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் மேற்படி பரீட்சைகள் நாடெங்கிலும் வெவ்வேறு பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறுகின்ற அதேவேளை, மட்டக்களப்பில் ஆசிரியர் கலாசாலை, கல்லடி, முகத்துவாரம் விபுலாநந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு புனித தெரேசா வித்தியாலயம் மற்றும் கல்லடி, உப்போடை சிவானந்தா தேசியக் கல்லூரி ஆகியவற்றில் நேர அட்டவணைப்படி நடைபெறும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் உதவிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .