Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, களுவன்கேணியில் தோணாவில் தவறி விழுந்து அப்பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் கிருஸ்ணபிள்ளை (வயது 65) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (25) மாலை அடை மழை பெய்துகொண்டிருந்த வேளையில் கடைக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, வீதியோரத்திலிருந்த தோணாவுக்குள் இவர் தவறி விழுந்துள்ளார்.
களுவன்கேணியில் தோட்டமொன்றில் வேலை செய்யும் இவர் தோட்டத்திலிருந்து மண்ணெண்ணை வாங்குவதற்காக கடைக்குச் சென்றதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இவரை உடனடியாக மீட்டெடுத்து செங்கலடிப் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வந்தபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025