Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ஹஸ்பர் ஏ ஹலீம்
வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின், அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டுமென, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.
“எனினும், எமது சமூகத்தின் உரிமைக்காக குரல் எழுப்பும் போது, அதனை பிரிவினைவாத கண்ணோட்டத்தில் சிலர் பார்க்கின்றனர்.
“நான், அண்மையில் அரசியலமைப்பு பேரவையில் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றியே பேசியிருந்தேன். எனக்கு அந்த அனுபவம் இருப்பதாலும் கிழக்கு மக்களின் உணர்வுகளைத் தெரிந்தமையாலுமே நான் அவ்வாறு பேசியிருந்தேன்.
“ஆனால், எனது உரையை சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் திரிவுபடுத்தி, மக்களைக் குழப்ப முற்பட்டுள்ளனர். ஊடகங்களில் வெளியான தலைப்புகளை வைத்து, சிலர் அறிக்கை வெளியிட்டுள்ளமை சிறுபிள்ளைத்தனமானது.
“யாழ். மாவட்ட த.தே.கூ. எம்.பி சரவணபவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதும் அதில் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
“அவர் குறிப்பிட்டது உண்மையெனில், முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அவ்வாறு உடன்பாடு காணப்பட்டுள்ளதா? அந்த உடன்பாடு என்ன? முஸ்லிம் அலகு வழங்குவதாக த.தே.கூ. உடன்பட்டுள்ளதா? அந்த அலகில் உள்ளடங்குகின்ற பிரதேசங்கள் என்ன? அலகின் அதிகாரங்கள் என்ன? போன்ற விடயங்களை இரு கட்சித் தலைமைகளும் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நாங்கள் வட, கிழக்கு இணைப்பு விடயத்தில் நிதானமாகவும் அவதானமாகவும் பேசுவோம்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago