Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலுக்குச் செல்ல அஞ்சுகின்றன என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.வசந்தராஜா தெரிவித்தார்.
நாட்டினதும் மக்களினதும் நன்மை கருதி, இந்த இரண்டு கட்சிகளும் தமது பிடிவாதத்தைத் தளர்த்தி, பொதுத் தேர்தலுக்குச் சென்று, அதனூடாக ஆட்சி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில், இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத்துக்கு ஒரு முகத்தையும் தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும் காட்டிவருகின்றதெனத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை, தனது குடும்ப நலனுக்காக ரணிலைக் காப்பாற்ற வேண்டும், ஐ.தே.கவுடன் உறவைப் பேணவேண்டும் என்றே செயற்பட்டு வருவதாகவும் இதனால் த.தே.கூவுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தி, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்குவோருக்கு ஆதரவை வழங்கி, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago