2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் படுகாயம்

Kanagaraj   / 2017 ஏப்ரல் 13 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்,வ.துசாந்தன்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில், காஞ்சரம்குடா பனையறுப்பான் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட நபர் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் இரு குடும்பங்களுக்கிடையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்வதற்காக மோட்டார் சைக்கிளை வீட்டில் இருந்து வாசலுக்கு எடுத்து வந்தபோதே இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் மீது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் செய்தபோது அது மோட்டார்சைக்கில் பெற்றோல் தாங்கியில் பட்டு வெடித்து சிதறியதையடுத்து அதன் அருகே இருந்த  கந்தப்போடி குமுதினி (வயது 33) வயது , கந்தப்போடி சுசிகலா  (வயது 19) . சதாசிவம் கவிதா (வயது 26 ), ரவீந்திரராசா சுபேதினி (வயது 31) ஆகிய  4 பெண்கள்; படுகாயமடைந்தனர்.

அவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .