2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தும்புக் கைத்தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கல்

Kogilavani   / 2016 ஜனவரி 21 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்  

மட்டக்களப்பு, அம்பிளாந்துறை மத்தி தும்பு பயிற்சி நிலையத்தில் விசேட பயிற்சி பெற்ற 22 பெண்களுக்கு, அவர்கள் தத்தம் வாழ்வில் சுய தொழில்களை மேற்கொள்ளும் வகையில் உபரகணங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(19) நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (ருNனுP) உதவியுடன்  தலா   45,000 ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டதாக பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.சுதேஸ்கரன் தெரிவித்தார்.

தும்பைப் பதப்படுத்தும் சட்டி, நிறப் பூச்சுச் சட்டி அச்சியந்திரம், ஒட்டும் பசைகள், வர்ணக் கலவைகள், மேசைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தளபாடங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (ருNனுP) அலுவலர்கள், பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் பயனாளிகளான பெண்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X