2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தாய்ப்பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 24 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்     

மட்டக்களப்பு, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலைக் கிராமத்தில்; தாய்ப்பால் புரைக்கேறியதால், மூன்று நாட்களேயான சிசுவொன்று புதன்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை, ஆலையடி வீதியைச் சேர்ந்த ஆண் சிசுவான த.ஜரூக்ஸன் என்ற சிசுவே உயிரிழந்துள்ளது.

இச்சிசு அழுதபோது தாய்ப்பால் கொடுத்து பிள்ளையை படுக்க வைத்ததாகவும் இதன் பின்னர்,  வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது இச்சிசு உயிரிழந்து காணப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X