2025 மே 08, வியாழக்கிழமை

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
 
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர், நேற்று வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, தியாவட்டுவான் மற்றும் மீறாவோடை போன்ற பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்த வேளையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் நியமிக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் எம்.அருனக்காந் தலைமையிலான பொலிஸ் குழுவினரே, இச்சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். 

05 அலைபேசிகள் மற்றும் சார்ஜர் டோச் லைட் ஆகிய 
திருடப்பட்ட பொருட்கள் பலவும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், 36, 22 மற்றும் 18 வயதுடையவர்கள் என்றும் இவர்களில் இருவர் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றயவர் மாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X