Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேத்தலில் போட்டியிட்ட 8 உறுப்பினர்களும், ஒன்றிணைந்து பல பிரசாரங்களை முன்னெடுத்திருந்தால் எமது கட்சிக்கு மேலும் அதிகளவான் வாக்குகள் கிடைக்கப் பெற்றிருக்கும், இந்த விதத்தில் எமது வேட்பாளர்கள் நான் உட்பட தவறு விட்டிருக்கின்றோம். இருந்த போதிலும் மக்கள் எமக்கு தந்துள்ள ஆணையை மக்களின் ஆசியுடன் சுமப்போம். என தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்து;ளார்.
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்றும் நிகழ்வொன்று வியாழக்கிழமை (24) எருவில் மட்.கண்ணகி வித்தியால கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்....
எதிர் காலத்தில் நடைபெறலுள்ள தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முறையான வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கினால் 150,000 மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும்,
புறவயமாகத் தெரிகின்றவைகள்தான் அபிவிருத்தி என சிலர் நினைப்பதுண்டு ஆனால், அகவயமாக மேற்கொண்டுள்ள பல முயச்சிகள் தமிழ்த் தேசியக்கூட்மைப்பினால் சாதிக்கப் பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் பறப்பு நிலை அரசியல் எமக்குச் சரிவராது அவ்வாறானவர்கள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வெளி நாடுகளிலிருந்து வந்து ,ங்கு தேர்தலில் குதித்துவிட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான அரசியல் சில்மிசம் செய்பவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழ் மக்கள் தங்களது இலட்சிய வேட்கையினை வெளிக்கொணருவதற்குத் தற்போது துணிதிருக்கின்றார்கள்.
எனவே,மக்களின் சிந்தனைகள் மென்மேலும் மெருகூட்டப்பட வேண்டும். நாங்கள் யாரும் அரசியல் இலாபம் தேடவோ, பணம் சம்பாதிக்கவோ அரசியலுக்கு வரவில்லை. என்றும் நாங்கள் மக்கள் சேவகனாக இருந்து பணிசெய்யவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
36 minute ago
43 minute ago