Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
தற்போதைய நல்லாட்சியில் இனப் பிரச்சினைக்குரிய தீர்வுக்கான முயற்சிகள் மற்றும் அபிவிருத்திப்பணிகள் சமாந்தரமாக முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
நாட்டில் எவ்வளவு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்களின் மனங்களை வென்று இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாதவரை சௌஜன்னியம் ஏற்படமாட்டாது எனவும் அவர் கூறினார்.
ஏறாவூரில் காதியார் வீதியை 55 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைக்கும் பணி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வில் உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'கடந்த காலத்தில் எமது நாட்டை ஆட்சி செய்த ஒரு ஜனாதிபதி வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்தார். மற்றுமொரு ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் பாலங்களும் பாதைகளும் சீரமைக்கப்பட்டன. இவையெல்லாம் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள். ஆனாலும், எமது நாட்டில் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம் மக்களின் மனங்கள் வெல்லப்படவில்லை. மேலும், 30 வருடகால யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இதனால், வளர்முக நாடான எமது தேசத்தில் நிரந்தர அமைதி ஏற்படவில்லை.
இவ்விடயத்தினைக் கருத்திற்கொண்டு தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலமாக அதிகாரப்பரவலாக்கத்தின் அடிப்;படையில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது' என்றார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
9 hours ago