2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு

Kogilavani   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்  

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள  ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலத்தில் முதல் முறையாக நேற்று புதன்கிழமை, திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிக்கப்பட்டது.

வித்தியாலயத்தின் பிரதி அதிபர் என்.இராஜதுரை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிபர் எஸ்.தில்லைநாதன், சிறப்புப் பேச்சாளராக ஆரையம்பதி சிவமணி வித்தியாலய அதிபர் வி.எஸ்.கமலநாதன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

'தமிழுக்கும், அறிவுக்கும் வழிவகுத்த சான்றோர்களை மாணவர் சமூகம் மகிமைப்படுத்தி வாழும் ஒழுக்க சீலர்களாகத் திகழ வேண்டும்' என்பதற்காக இந்த நிகழ்வு பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டதாக பிரதி அதிபர் என்.இராஜதுரை தெரிவித்தார்.

நிகழ்வில் திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதேவேளை கற்பித்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X