ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 மே 19 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசத்தில் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவர் உட்பட ஐவரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
ஆரையம்பதி, அமரசிங்கம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில், கடந்த 15ஆம் திகதி பெருமளவு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டிருந்தனர்.
இதற்கமைய, மாணவர்கள் இருவர், குறித்த வீட்டில் பணிபுரிந்ததாகக் கூறப்படும் இளைஞர் உட்பட ஐவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த சந்தேகநபர்கள், கொள்ளையிட்ட தங்க நகைகளை, நகைக்கடைகளில் விற்பனை செய்திருந்தமை பொஸில் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களிடமிருந்து பதினெட்டரை பவுன் நகைகள் மீட்கப்பட்டதெனப் பொலிஸார் காத்தான்குடி தெரிவித்தனர்.
இவர்கள், நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோதே, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025