2025 மே 07, புதன்கிழமை

தங்கச் சங்கிலித் திருடன் சிக்கினான்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 21 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை அபகரித்துச் சென்ற திருடனை, சில மணி நேரங்களுக்குள் கச்சிதமாகக் கைது செய்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சங்கிலித் திருட்டுச் சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (19) மாலை மட்டக்களப்பு புறநகர்ப் பகுதியிலும் ஏறாவூர் நகரிலும் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியான சுவிஸ் கிராமத்தில் தங்கச் சங்கிலி அணிந்தவாறு தனியாக வந்த பெண்ணை வழி மறித்த சங்கிலித் திருடன், அந்தப் பெண்ணிடமிருந்த தங்கச் தங்கிலியை அபகரித்துக் கொண்டு, ஆளரவமற்ற கடற்கரையோர சவுக்கடி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் ஏறாவூரை நோக்கிச் சென்றுள்ளார்.

செல்லும் வழியில், ஏறாவூர் பழைய சந்தை வீதியில் மற்றொரு பெண் தங்கச் சங்கிலி அணிந்து தனியாகச் செல்வதை நோட்டமிட்ட அதே தங்கச் சங்கிலித் திருடன், அந்தப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கச் சங்கிலியையும் அபகரித்து தப்பிச் சென்றுள்ளான்.

எனினும், துரிதமாகச் செயற்பட்ட ஏறாவூர் பொலிஸார், சி.சி.டி.வி கமெரா பதிவுகளின் உதவியுடனும் புலானய்வு விசாரணை அடிப்படையிலும் காத்தான்குடியைச் சேர்ந்த நபரை, சந்தேகத்தின் பேரில் நேற்று (20) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் தங்கச் சங்கிலிகள் திருட்டுக்காக அதிவேகமாகச் செல்வதற்காக பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸாரும் மட்டக்களப்பு பொலிஸாரும் இணைந்து இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X