2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திய 6 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 17 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் வாவியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மீனவர்கள் 06 பேரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாகக் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் த.பாலமுகுந்தன் தெரிவித்தார்  

குறித்த வாவியில்; தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கை இடம்பெறுவதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சென்று சோதனை மேற்கொண்டபோது, குறித்த மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை தெரியவந்தது.

இந்நிலையில், குறித்த மீனவர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து சுமார் 3   இலட்சம் ரூபாய் பெறுமதியான  தடைசெய்யப்பட்ட வலைகளையும் சுமார் 50 கிலோ மீன்களையும்; கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X