Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் தொழிற்சாலை அமைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு எதிராக, புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு முன்பாக நாளை (09) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதென, பிரதேச பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இவ்வார்ப்பாட்டம், ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தும் நோக்குடன், “ஜனாதிபதிக்குச் சொல்வோம்”' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்பிரதேசத்தில் கிணறுகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழ்நிலையில், இங்கு இத்தொழிற்சாலை அமைப்பதன் மூலம் இப்பிரதேச நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, எதிர்காலத்தில் இப்பிரதேசம் பாலைவனமாகும் நிலை ஏற்படும் என்ற ஐயத்தில் பொதுமக்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துவருவதுடன், சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் இதற்கு ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தொழிற்சாலைக்கு எதிராக அப்பிரதேசப் பொதுமக்கள், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட பலர், பல வழிகளிலும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, இத்தொழிற்சாலை அமைப்பதற்கு காத்தான்குடி, செங்கலடி சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
42 minute ago
55 minute ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
55 minute ago
23 Aug 2025