வா.கிருஸ்ணா / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவுப் பகுதியில் தந்தை – மகனுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விலக்கச்சென்றவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாரென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை (14) மாலை, கட்டுமுறிவிலுள்ள வீடொன்றில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள நிலையில், தகப்பன், மண்வெட்டியால் மகனைத் தாக்கிய போது, அதனைத் தடுக்க முற்பட்ட குறித்த பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.சௌந்தரராஜன் என்பவர், மண்டிவெட்டியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார்.
அதனைத்தொடர்ந்து, அவர், கதிரவெளி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்துள்ளாரென வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விக்னேஸ்வரன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் மதுபோதையில் இருந்துள்ள சந்தர்ப்பத்திலேயே, இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் வாகரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago