2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தனியார் கல்வி நிலையத்தில் தீ விபத்து

Sudharshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

 மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தாமரைக்கேணி  பகுதியிலுள்ள   தனியார்  கல்வி நிலையத்தில் வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், தளபாட பொருட்களும் ஆவணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ பரவிய வேளையில்  மற்றுமொரு அறையில் மாணவர்கள் கல்விப் பயின்றுகொண்டு இருந்துள்ளனர். இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  தீயினை ஆசிரியரும்  மாணவர்களும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீக்கான காரணம் குறித்து ஆசிரியரிடம் வினவிய போது, 'விளக்கு ஏற்றி  வைத்திருந்தோம்.  இந்த விளக்கில் இருந்த திரியை  எலி  கொண்டுச் போய் ஆவணங்களின்; மேல் போட்டிருக்கலாம். இதனாலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவித்தார் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X