Princiya Dixci / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபரொருவருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான்,12,000 ரூபாயை இன்று (23) அபராதமாக விதித்தார்.
மட்டக்களப்பு, கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரொருவர், தனிமைப்படுத்தல் காலம் முடிவடைவதற்குள் வெளியேறியுள்ளார். அது மாத்திரமன்றி, முகக்கவசம் அணியாமல் நடமாடியுமுள்ளார். இந்த இரு குற்றச்சாட்டுகளுக்கும் 12,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
முதலாவது குற்றச்சாட்டுக்கு 10,000 ரூபாயும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 2,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர் மீது, கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago