2025 மே 09, வெள்ளிக்கிழமை

தனியார் பஸ் நிலையத்தைக் கையளிக்க பிரதமர் ரணில் வருகை

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு நகரிலில், 65 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் நிலையப் புதிய கட்டடத்தொகுதியைத் திறந்து, போக்குவரத்துச் சேவைக்காகக் கையளிக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்ச வருகைதரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு, இம்மாதம் 12ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தத் தனியார் பஸ் நிலையம், மட்டக்களப்பு மாநகரை  அழகுபடுத்தும் விசேட திட்டத்துக்கமைய  மாநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சால் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளின் ஏற்பாடுகள் பற்றித் திட்டமிடும் விசேட கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில், மாவட்டச்  செயலகத்தில், நேற்று (02)  நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X