2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சாத்வீக போராட்டம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா  

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கவனயீர்ப்பு சாத்வீக போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (09) மாலை நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்புப் சாத்வீகப் போராட்டத்தின்போது ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரை அரசாங்க அதிபரிடம்  வழங்கப்படும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிடின், தங்களது கவனயீர்ப்புப் சாத்வீகப் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக மாறுமெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  கடந்த 17ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் வழங்கிய வாக்குறுதியை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. கட்டம் கட்டமாக பிணை வழங்காமல், அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்ய முன்வருமாறு வேண்டுவதாக இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
 
எனவே, இந்த கவனயீர்ப்பு சாத்வீகப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X