Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் கைதிகள் படிப்படியாக சட்டத்தின் வரையறைகளுக்குள் நின்று விடுதலை செய்யப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் ராஜிதசேனா ரத்தின தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கட்டிடத்தை வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்த வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.இப்றாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜிதசேனா ரத்ன, தமிழ் கைதிகள் படிப்படியாக சட்டத்தின் வரையறைகளுக்குள் நின்று விடுதலை செய்யப்படுவார்கள். அதில் சில கைதிகளுக்கு பல்வேறு குற்றங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் சட்டத்தின் ஒழுங்கில் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். 32 தமிழ் கைதிகளுக்கு அண்மையில் பிணை வழங்கிய போதும் அவர்களை பிணை எடுப்பதற்கு முன்வரவில்லை.
இந்த புற்று நோய் வைத்தியசாலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைக்க விருந்தார். ஆனால் காலநிலை மற்றும் வேறு நிலைமை போன்ற காரணங்களினால் ஜனாதிபதியின் விஜயம் ரத்தானது.
ஜனாதிபதியவர்கள் சுகாதார அமைச்சராக இருந்து சுகாதார துறையை முன்னேற்றியுள்ளார். ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்பும் உதவியும் எமக்குண்டு என அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago