2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தமிழ் கல்வி வலயங்களில் பட்டிருப்பு கல்வி வலயம் முன்னணியில்

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.மோகனதாஸ்

நாங்கள் முன்னேறி வருவதற்கு எங்களுடைய சமூகத்தின் ஒத்துழைப்பு மிக அவசியமாவதுடன் ஒரு சமூகம் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் அது கல்வியின் ஊடாகத்தான் வளர்ச்சியடை முடியும் என மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சமூக விழிப்புணர்வு மன்றத்தினால், பட்டிருப்பு மற்றும் வெல்லாவெளி கோட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேற்றாத்தீவு புனித யூதா திருச்சபையின் அருட்தந்தை நிர்மல சூசைராஜ் ஆன்மீக அதிதியாகவும் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் வே.குணராசசேகரம், மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் தி.தவநேசன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் வெல்லாவெளி கோட்டக்கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன்,மண்முனை தென் எருவில் பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.திரவியராஜா ஆகியோர் அழைப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஒரு சமூகத்தில் ஒத்துழைப்பும் ஊக்கமும் இருக்கின்ற போதே கல்விச் சமூகத்;தினால் கல்விச் செயற்பாடை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லக்கூடியதாக இருக்கும்.கல்வி என்பது தொடரான கருமத் தொடர் ஒரே நாளில் எங்களுடைய நோக்கங்களை நிறைவேற்ற முடியாது. கல்விச் செயற்பாடானது கூட்டுக்கருமத் தொடர், எல்லோரும் சேர்ந்து ஒத்துழைத்துச் செல்கின்ற செயற்பாட்டை கொண்டதாகவே அமைந்துள்ளது.

கல்விப் புலத்தில் ஏற்படுகின்ற சமூக மாற்றங்களும் எங்களுடைய கல்வியிலும் மாற்;றத்தை ஏற்படுத்தும். கல்விப்புல மாற்றங்கள், ஒத்துழைப்புகள் மற்றும் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மூலமாகவே சிறந்ததொரு எதிர்கால கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும்.

மாணவர்கள் பாடத் தெரிவுகளில் மிகவும் கவனம் செலுத்தி கலைப்பாடங்களை குறைத்து கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பாடப் பிரிவுகளை கற்பவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ் கல்வி வலயங்களில் முதனிலை பெறக்கூடிய இடத்தில் எங்களுடைய செயற்பாடுகள் இருந்துகொண்டிருக்கின்றன.எதிர்வரும் காலங்களில் நாங்கள் அனைவரும் இணைந்து கூடுதலாக சிறப்பு சித்திகளை பெறக்கூடியவாறு செயற்பட்டு வருகின்றோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X