Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 26 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்
தமிழ் தரப்பிலேயே, தங்களைத் தீவிரவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் சில போலி தேசியவாதிகள், புதிய அரசமைப்பை முறியடிப்பதற்குக் கங்கணம் கட்டியுள்ளார்களென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பேடினன்ட் மண்டபத்தில் நேற்று (25) மாலை நடைபெற்ற புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாகத் தெளிவூட்டல் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
“புதிய அரசமைப்புச் சட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதிலே, சிங்கள தீவிரவாதிகள் மிகவும் மும்மூரமாக இருக்கிறார்கள். அத்துடன், அரசமைப்பின் இடைக்கால அறிக்கை வெளிவந்த உடனேயே, இதனை நிராகரித்துவிட வேண்டும், இதிலே தமிழருக்கு எதுவும் இல்லை, கிடையாது என்ற கருத்துகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர்கள் மத்தியிலிருந்து கூட வெளிவந்தது.
“அறிக்கை வெளிவருவதற்கு முன்பே, சம்பந்தன் ஐயாவும் நானும் வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று கூட, த.தே.கூவில் இருந்தவர்களிடமிருந்து கருத்துகள் வந்தன. அதைப் பலர் தூண்டிக் கொண்டிருந்தார்கள்.
“உபகுழு அறிக்கை வந்தபோது, அதில் இருந்த முன்னேற்றங்களை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இது வருமா? வராதா? என்பதை விடுத்து, இந்தளவு தூரம் முன்னேற்றமடைந்துள்ளது என்பதை எதிர்பார்த்திருக்காத காரணத்தாலேயே, அது குறித்து விமர்சனமும் செய்யவில்லை. அவர்கள் எதிர்பார்த்ததை விட முன்னேற்றகரமாக அமைந்திருந்தது.
“இடைக்கால அறிக்கை சற்று தமதமாக வந்தபோதிலும், அந்த அறிக்கை எவ்வாறு இருந்தாலும் அதற்குப் போர்க்கொடி தூக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு எங்களில் சிலர் அப்போதே வந்துவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக, அறிக்கை வந்தவுடன், அதை நிராகரிக்க வேண்டுமென, வடக்கு முதலமைச்சர் அறிக்கைவிட்டார்.
“இடைக்கால அறிக்கையை நிராகரித்துவிட வேண்டும்”, “மக்களைக் குழப்பிவிட வேண்டும்”, “இதன் மூலமாக, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கிறது”, “இதிலே தமிழ் மக்களுக்கு ஒன்றுமில்லை” எனக் கோஷமிடுவது, ஏற்கெனவே தயார்படுத்திய விடயம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago