Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 ஜூலை 07 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசாங்கத்தின் கொள்கைகளையும் ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகுமென, மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு, த.தே.கூவுக்கு வாக்களிப்பது காலத்தின் தேவையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று (07) நடைபெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 05 உறுப்பினர்களுக்காக 304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் சில கட்சிகளினூடாக பல தழிழர்கள் போட்டியிடுகின்றனர்.
“ஆனால், த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களைத் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் ஒரு துரோகமாகத்தான் கருதப்படும்.
“த.தே.கூட்டமைப்பு தவிர்ந்த கட்சிகள், மாயையான தோற்றப்பாடுகளை நம் இளைஞர்கள் மத்தியில் தோற்றுவித்து, அவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
“இந்த உதிரிக் கட்சிகளுக்கு, தமிழ் மக்கள் அளிக்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் பல கட்சிகளுக்குப் பிரிவதால் அவர்களை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்வதை தவிர்க்க வேண்டும. அவ்வாறு அல்லாவிடின், தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அடக்கு முறைகளுக்கு உறுதுணை அளிப்பவைகளுமாவேதான் அமையும். இதனை தமிழ் வாக்காளப் பெருமக்கள் அறிந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago