2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தமிழ் - சிங்கள புத்தாண்டு விழா - 2018

Editorial   / 2018 ஏப்ரல் 21 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷாரா

23ஆவது கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இணைந்து, மட்டக்களப்பு, சித்தாண்டியிலுள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழ் - சிங்கள புத்தாண்டு விழாவை, நாளை (22)  நடத்த சகல ஏற்பாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

காலை 8 மணிமுதல் பிற்பகல் 2.30 மணிவரை நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில், ஆண், பெண்களுக்கான சைக்கிள் ஓட்டம், மரதன், கயிறு இழுத்தல் அழகு ராணிப் போட்டி, அழகு ராஜா போட்டி, பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளன.

இவ்விழாவில், பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி சந்துஸ் பனன்வெல்ல, மாவட்ட செயலாளர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.மணிவண்ணன், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X