Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில், தமிழ் முதலமைச்சர் ஒருவரை உருவாக்குவதற்கு சகல தமிழ் கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கேட்டுக்கொண்டார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு, கல்குடாத் தொகுதிக் காரியாலயம், கிரானில் இன்று (08) திறந்துவைக்கப்பட்டது.
அம்முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் தெய்வநாயகம் செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக காரியாலத்தைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
அவர் இங்கு தொடரந்து உரையாற்றுகையில், படைத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரம் செய்து, தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கோட்டாபயவுக்கு ஏன் வாக்களிக்க முடியாதெனக் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்ததன் காரணமாகத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனதாகத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி பிரதேச சபைகள் தங்களது கட்சியின் ஆதரவுடனேயே உள்ளதாகவும் தாங்கள் விலகினால் ஆட்சி கவிழ்ந்துவிடுமெனவும் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுதலை செய்தார் எனவும் ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் கல்முனை பிரதேச செயலகத்தைக்கூடத் தரமுயர்த முடியாத நிலையில் கூட்டமைப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
48 minute ago
5 hours ago