2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் மக்கள் சந்திப்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜூலை 01 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் கட்சிக் கொள்கை தொடர்பான விளக்கவுரைகள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், கட்சியின் கொள்கை விளக்கக் கலந்துரையாடல், கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில், புதுமண்டபத்தடியில் நேற்று (30)   நடைபெற்றது. 

இக்கலந்துரையாடலில் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் ஆலோசகருமான பி.ஜோன்சன், ஆலோசகர் செ.புவனேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பேச்சாளர் எம்.புவிதரன், வடக்கு, கிழக்கு அரசியல் ஒருங்கிணைப்பாளர் எம்.பரணிதரன், கட்சியின் வவுணதீவுப் பிரதேச ஒருங்கிணைப்பாளர் என்.ஜினேஸ், கட்சி உறுப்பினர்கள், மாவீரர் குடும்ப உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கட்சி ஆரம்பித்ததன் நோக்கம், அதன் கொள்கை விளக்கங்கள் தொடர்பில் பிரதேச மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், வறுமைப்பட்ட மக்களின் பிள்ளைகளின் நலனுக்காக, சுவிஸ் நாட்டில் வசிக்கும் மகிழூரைச் சேர்ந்த மார்க்கண்டு தேவதாஸினால் அவரின் தந்தையாரின் நினைவாக மாதாந்தம் 10 சிறுவர்களுக்கு சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கும் செயற்பாடும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினரால் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X