2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க கோரிக்கை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்  

கிழக்கு மாகாண சபையின் கீழ், தற்காலிகமாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் (ஈ.பி.ஆர்.எல்.எப்) கோரிக்கை விடுத்துள்ளார். 

இவ்விடயம் குறித்து, உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு  அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘தற்காலிகமாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்குவதாக 17.09.2019 அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.  

“இதன்படி, 2019.09.01 அன்றிலிருந்து 180 நாள்களைப் பூர்த்திசெய்துள்ள தற்காலிகம், ஒப்பந்தம், பதில், நாள்கூலி, நிவாரண அடிப்படையில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்குமாறு வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்துக்கு அமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

‘எனினும், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளிலும், ஏனைய திணைக்களங்களிலும் அண்ணளவாக 750க்கு மேற்பட்டோர் தற்காலிகமாகக் கடமையாற்றுகின்றனர். இவர்களுக்கான நிரந்தர நியமனத்தை, தேர்தல் காரணத்தைக் கொண்டும், பொது நிர்வாக அமைச்சு, கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பிய கடிதத்தின் பிரகாரமும் 180 நாள் நிரந்தர நியமனத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. 

‘தற்சமயம் தேர்தல் காலம் முடிவடைந்துள்ளதால், இவர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவும்’ என, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .