2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘தற்போதைய அரசாங்கத்தில் அபிவிருத்திகள் இல்லை’

வடிவேல் சக்திவேல்   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அபிவிருத்திபொன்று, தற்போதைய அரசாங்கத்தில் எதுவித அபிவிருத்திகளும் நடைபெறவில்லையென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் செயற்பாட்டாளருமான பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதுவிதப் பலனும் கிடைக்காத காரணத்தால், தமிழ் மக்கள் தற்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கடசியை விரும்புகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்கால அரசியல் நிலவரம் குறித்து மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து இன்று (03) கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வீதி அபிவிருத்தி, யாழ்.ரயில் சேவை, பட்டதாரிகளின் தொழில்வாய்ப்பு போன்ற பல அபிவிருத்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்டார் எனவும் இதுபோன்ற அபிவிருத்திகளை தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார்.

மேலும், கோட்டாபய வெற்றி பெற்றதன் பின்னர் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த உறுதிமொழி வழங்கியுள்ளாரெனத் தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்குரிய தீர்வை வழங்கக் கூடிய தகுதி ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு இருப்பதாக உலகம் நம்புவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X