2025 மே 08, வியாழக்கிழமை

தலைக்கவசம் அணியாத 141 பேர் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்  

மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசங்களை அணிந்து செல்லாத 141 பேர்; மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை; போக்குவரத்து சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, மத்தியமுகாம், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் போக்குவரத்து பொலிஸார் அழைக்கப்பட்டு இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த 141 பேரும்; 14 தினங்களுக்குள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று அவர்களுக்கான தண்டப்பண பற்றுச்சீட்டை பெற்று அதை செலுத்த வேண்டும். இதற்கு தவறுபவர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்துக்கு  சமூகமளிக்க வேண்டும் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி விபத்துக்களை தடுக்கும் வகையிலும் போக்குவரத்து நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X