Editorial / 2018 ஜனவரி 15 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்
ஏறாவூர் பொலிஸ் பிரிவு புன்னைக்குடா வீதியை அண்டி வாழும் 60 வயதுடைய தனது தாயை கடந்த வியாழக்கிழமை (11) தொடக்கம் காணாமல் போயிருப்பதாக பிள்ளைகள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று(15) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுமத்திரா தங்கவேல் (வயது 60) என்ற 05 பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மேலும், அவ்வப்போது மறதி நோய் காரணமாக பாதிக்கப்படும் இவர், சில மணி நேரங்களில் நினைவுக்கு வந்து விடுவார். ஆனால் இதுவரை இவ்வாறு நீண்ட நாட்கள் காணாமல் போனதில்லை.
இவ்வாறு காணாமல் போனவருக்கு அம்பாறை மாவட்டம் - கோமாரி, கல்முனை, மட்டக்களப்பு மற்றும் கொழும்பில் சகோதரர்கள் உள்ள போதும் இவர் இவர்கள் எவரிடமும் இதுவரை போய்ச் சேரவில்லை என்று அறியக் கிடைத்துள்ளது.
தயவு செய்து தங்களது தாயைக் கண்டவர்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது காணாமல் போனவரின் மகன்மார்களான தங்கவேல் தர்மராஜ் 0777778988 அல்லது தங்கவேல் பால்ராஜ் 0771759169 என்ற இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு கேட்டக் கொள்ளுகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .