2025 மே 16, வெள்ளிக்கிழமை

தாளங்குடா விபத்தில் இருவர் படுகாயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாளங்குடா சந்தியில், இன்று திங்கட்கிழமை (13) காலை இடம்பெற்ற விபத்தில், கூலித் தொழிலாளி ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த காரொன்று, தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, தாளங்குடாவிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சைக்கிளில் மோதுண்டு, அருகிலிருந்த மரமொன்றுடன் மோதி நின்றுள்ளது.

இச்சம்பவத்தில், காரை செலுத்திச் சென்றவரும் கூலித் தொழிலாளியுமான தாளங்குடாவைச் சேர்ந்த எஸ்.ஆறுமுகம் (வயது 56) என்பவர் காயமடைந்த நிலையில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .