Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 05 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்புப் பொறுவது தொடர்பான அரசின் சுற்றுநிரூபத்தை, மட்டக்களப்பிலுள்ள சில திணைக்களங்கள் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியதையடுத்து, இது தொடர்பில் தனக்கு அறியத்தருமாறு, மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் பணித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்டத் தகவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகின்ற நிலையில், அரச திணைக்களங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, வீட்டிலிருந்தவாறே பணி செய்வதற்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க திணைக்களத் தலைவர்களுக்கு, சுற்றுநிரூபம் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“இருப்பினும், மட்டக்களப்பில் சில திணைக்களங்களில் இந்நடைமுறை பின்பற்றப்படாமல் சகல உத்தியோகத்தர்களும் முழுநேரக் கடமைபுரியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
“தூர இடங்களில் இருந்தும், பொதுப் போக்குவரத்துகள் மூலம் கடமைக்கு வருபவர்களும், கர்ப்பிணிகளும் இவ்வாறான சூழ்நிலையில் முழுநேரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் செயற்பாடாகுமா?
“எனவே, திணைக்களத் தலைவர்கள் இது தொடர்பில் கவனஞ்செலுத்தி, சுற்றுநிரூபத்துக்கமைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago