2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தொழிநுட்ப உதவி நாடப்பட்டுள்ளது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு, ஜனதாக்ஸன் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி நாடப்பட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அனுலா அன்டன், நேற்று (29) தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை, சூழலுக்கு இசைவாக்கம் அடையக்கூடியவாறு, மறுசுழற்சி உற்பத்தியாக மாற்றுவதற்குத் தேவையான சாத்தியவள விவரங்களைக் கண்டறிவதற்கான கள விஜயம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில், காத்தான்குடி நகரசபைப் பிரிவில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளுக்குச் சாத்தியப்பாடான தொழில்நுட்பத் தீர்வுகளை எட்ட முடியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும். சூழலுக்கு மிகவும் ஆபத்தானதும் உக்கிப் போகாததுமான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை, தொடர்ந்து பாவிப்பதைப் பற்றி பொதுமக்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X