எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மே 23 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபையிடம், தீயணைக்கும் இயந்திரமொன்று இல்லாமையால், இப்பிரதேசத்தில் ஏற்படும் தீ விபத்துகளை அணைப்பதற்குப் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
“மஞ்சந்தொடுவாய் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு மர ஆலைகள் தீப்பிடித்து எரிந்த போது, காத்தான்குடி நகர சபைக்கெனத் தீயணைக்கும் இயந்திரமொன்று இருந்திருந்தால், அதன்மூலம் இந்த மர ஆலைகளின் தீயை உடனேயே அணைத்து, ஏற்பட்ட சேதத்தைக் குறைத்திருக்கலாம்” என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
காத்தான்குடி நகர சபைப் பிரிவு, மக்கள் சன அடர்த்தியான பிரதேசமாகவும் நெருக்கமான இடமாகவும் அருகருகே வீடுகள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் காணப்படுவதாலும், திடீரென ஏற்படும் தீ விபத்துகளை உடனேயே அணைப்பதற்கு, தீயணைக்கும் இயந்திரம் அவசியமாகிறது என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இது விடயத்தில், காத்தான்குடி நகர சபைத் தவிசாளரும் நகர சபை உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025