Editorial / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
பெறா மகளின் திடீர் மரணச் செய்தியினால் துக்கம் தாங்காது திடீரென சுகயீனமடைந்த சிறிய தாயும் மரணமடைந்த சோக நிகழ்வொன்று அக்கரைப்பற்றில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்துவந்த, நான்கு பிள்ளைகளின் தாயாரான சுந்தரலிங்கம் கமலா (வயது 59) ஒக்டோபர் 01 ஆம் திகதி தீடிர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
மரணச்செய்தி அறிந்து வீட்டிற்கு சென்ற அவரின் சிறிய தயார் அருளப்பு தங்கம்மா (வயது 85) துக்கம் தாளாமல் மயக்கமடைந்தார். அதன்பின்னர், அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவர், திங்கட்கிழமை (02) மாலை உயிரிழந்தார். அன்னாரது பூதவுடல் அக்கரைப்பற்று இந்து மயானத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றது.
உயிரிழந்த பெறா மகள்,சிறுவயது முதல் சிறிய தயாருடன் பாசத்துடன் வளர்ந்து வந்துள்ளார்.
உயிரிழந்த இருவரது பூதவுடல்களும் மயானத்தில் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .