Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 09 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை வட்டார வன பிரிவில், இன்று (09) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பையடுத்து, 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரங்களும், 62 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், முறுத்தானை, அக்குறானை போன்ற பிரதேசங்களில் சட்டவிரோத மரம் வெட்டப்படுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே, அப்பகுதியில் சற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 03 உழவு இயந்திரத்தில் 50 முதிரை மரக்குற்றிகள் ஏற்றப்பட்ட நிலையிலும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சமையலுக்குப் பயன்படுத்திய பாத்திரங்களையும் வட்டார வன உத்தியோகத்தரகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள், உழவு இயந்திரம், மரக்குற்றிகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களது என்று ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago