Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், அ.அச்சுதன், பொன்ஆனந்தம்
பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன், தேர்தல் பற்றிய எவ்விதப் பேச்சுவார்த்தைகளையும் தாம் மேற்கொள்ளப்போவதில்லை என, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜரெட்னம் இராஜேந்திரா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் செய்கின்றோம் என்ற போர்வையில், பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களின் அழிவுக்கும் யுத்தமீறல் குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புக்கூற கோட்டாபய ஆளாகியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை, கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு பற்றி அண்மையில் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்தக் கலந்துரையாடல் தொடர்பாக இன்று (22) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார, கலாசாரம் சம்பந்தமான பிரச்சினைகள் பற்றிய தமது எதிர்பார்ப்புகளை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளரின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்ததுடன், அவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக ஈரோஸ் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான இறுதி முடிவை விரைவில் வெளியிடவுள்ளோம் என்றார்.
11 minute ago
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
39 minute ago
3 hours ago