Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம்
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி தெற்கு கிராம சேவை பிரிவில் யுத்ததால் பாதிக்கப்பட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தையல் பயிற்சி நிலையம், கிராமிய விவசாய நீர்பாசன, கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலியால், நேற்று (23) திறப்புவைக்கப்பட்டது.
அமைச்சரின் இணைப்பாளர் எம்.கண்னண் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
சுமார் 16 யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 06 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் இந்தத் தையல் பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago