Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
எமது கட்சி உறுப்பினர்களது நாடாளுமன்ற செயற்பாடுகள் மக்கள் மீதும், சமூகம் மீதும் கரிசனை இல்லாத சூழலில் இக்கட்சியோடு தொடர்ந்தும் பயணிக்க முடியாமைக்கு என்னை மன்னியுங்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார் அலிஸாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்பியும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா தனது இராஜினாமாக் கடிதத்தை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீமுக்கும், அதன் பிரதியை கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் அலிஸாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளதாவது, “எந்தவித சலுகைகளையோ, சிறப்புரிமைகளையோ, பதவிகளையோ நான் எதிர்பார்க்கவில்லை. அவற்றை தேடி அலைபவனுமில்லை. உண்மையிலேயே, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி ஸ்திரத்தன்மையை நிலைபெற வைப்பதற்க்காக எனது நாடாளுமன்ற பதவியை தானே முன்வந்து இராஜினாமாச் செய்த ஒரு சிலரில் நானும் ஒருவன் என்று சொல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
“முஸ்லிம் சமூகத்துக்காகவும், எமது நாட்டின் அத்தனை பிரஜைகளின் சுபீட்சத்துக்கும் நான் ஆரம்பம் முதல் தொழிற்பட்டு வந்தேனோ, அதே அடிப்படையில்தான் என்னால் தொடர்ந்தும் செயற்பட முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
53 minute ago
58 minute ago